Jio வாடிக்கையாளர்களுக்கு Netflix இலவசம்! இனிமே ப்ரீபெய்டு பயனர்களுக்கு டபுள் போனஸ்!

வெள்ளிக்கிழமை அன்று நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி, இனி ஜியோவின் மில்லியன் கணக்கான ப்ரீபெய்டு பயனாளர்களுக்கும் குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தின் வழியாக Netflix சப்ஸ்க்ரிப்ஷன் சலுகை கிடைக்கும்.

ஜியோ- நெட்ஃப்ளிக்ஸ் பிளான்

இந்தியாவின் முன்னணி மற்றும் முதன்மை டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் 400 மில்லியனுக்கும் அதிகமான ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 84 நாட்களுக்கான 1099 அல்லது 1499 ரூபாய் ரீசார்ஜ் செய்வதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த Netflix சப்ஸ்க்ரிப்ஷன் சலுகையை பெறுவார்கள்.

ஜியோ சிஇஓ அறிவிப்பு

இதுகுறித்து பேசியுள்ள ஜியோவின் சிஇஓ கிரண் தாமஸ், உலகத்தரம் வாய்ந்த சேவைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான உறுதியை வழங்கியுள்ளோம். அந்த வகையில் உலகின் முன்னணி ஒடிடி தளமான Netflix-ஐ எங்கள் ப்ரீபெய்டு திட்டங்களோடு இணைத்ததன் மூலம் எங்கள் சத்தியத்தில் அடுத்த படியை எட்டியுள்ளோம். ஜியோ – நெட்ஃப்ளிக்ஸின் வலுவான கூட்டணி மூலம் உலகிற்கே முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் துணைத்தலைவர் பெருமிதம்

மேலும் இதுகுறித்து பேசிய நெட்ஃப்ளிக்ஸின் துணைத்தலைவர் டோனி, இது வரை இந்தியர்களால் விரும்பப்பட்ட வெற்றிகரமான ஆவணப்படங்கள், படங்கள், நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம். தற்போது அறிமுகப்படுத்தும் ஜியோ – நெட்ஃப்ளிக்ஸ் கூட்டணி மூலம் மேலும் பல வாடிக்கையாளர்கள் இந்த தளங்களை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ரீசார்ஜ் திட்டம்

இந்த புதிய திட்டத்தின் கீழ் 1099 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு 2GB(ஒரு நாள் வீதத்தில்) , Netflix மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் இதர சலுகைகளும் கிடைக்கும். அதே போல், 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு 3GB(ஒரு நாள் வீதத்தில்) , Netflix மொபைல் மற்றும் டிவி சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் இதர சலுகைகளும் கிடைக்கும்.

இதே நீங்கள் Netflix மற்றும் ஜியோ ஆகியவற்றில் தனித்தனியாக ரீசார்ஜ் செய்தால் அதன் விலை எங்கோ போகும் என்பதால், இந்த இரண்டு தளங்களையும் பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்குதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.