Honor Play 40S மொபைலில் இடம்பெற்றுள்ள 5200mAh அதிநவீன பேட்டரி! ப்ராசஸர் மற்றும் கேமரா விவரங்கள்..

டெக் உலகில் நாளுக்கு நாள் குறைந்த விலையில் அதிநவீன டெக்னாலஜிகள் இடம்பெறும் புதிய மொபைல்கள் வெளியாகி உள்ளன. அதில் முக்கியமானது மொபைல் நீடித்து உழைப்பதற்கான பேட்டரி, மல்டி டாஸ்கிங் செய்வதற்கான அதிநவீன ப்ராசஸர் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி Honor நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தம்புது Honor Play 40S மொபைலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Honor Play 40S-ல் அதிநவீன ப்ராசஸர்Honor Play 40S மொபைலில் அதிநவீன Qualcomm Snapdragon 480 Plus ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
​கேமரா வசதிகள்Honor Play 40S-ல் இடம்பெற்றுள்ள கேமரா வசதியை பொறுத்தவரை பின்புறம் 1080P வீடியோ சப்போர்ட் வசதியுடன் 13 மெகாபிக்ஸல் கேமரா , முன்புறம் 5 மெகாபிக்ஸல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
Honor Play 40S டிஸ்பிளே6.56 இன்ச் TFTLCD டிஸ்பிளே மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி திறன்Honor Play 40S மொபைல் நீடித்து உழைப்பதற்காக 5200mAh பேட்டரி திறன் மற்றும் 5V/2A சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
நிறங்கள்Honor Play 40S மொபைல் தற்போது சீனாவில் Mo Yuqing , Magic Night Black நிறங்களில் வெளியாகி உள்ளது.
Vivo V29e மொபைலின் விலைதற்போது சீனாவில் மட்டும் வெளியாகியுள்ள Honor Play 40S மொபைல் 999 யுவானுக்கு விற்பனை ஆகிறது. இது இந்திய மதிப்பில் 11,500 என்ற விலை ஆகும். இந்தியாவில் வெளியானால் 11,000 முதல் 13,000 வரை Honor Play 40S மொபைல் விற்பனை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.