Kavin: வியக்காமல் இருக்க முடியல: கவின் திருமணத்தன்று போஸ்ட் போட்ட லோஸ்லியா

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கவினுக்கும், இலங்கையை சேர்ந்த லோஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் கிளம்பியபோது அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார் லோஸ்லியா.

ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி
அவர்களின் காதலை பார்த்து கவின்லியா ஆர்மி உருவானது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு கவின், லோஸ்லியா காதல் முறிந்தது. அது குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை. லோஸ்லியாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் தான் காதல் முறிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தனக்கு 30 ஆண்டுகளாக பழக்கமான மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொண்டார் கவின்.

கவின், மோனிகாவின் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. அதில் கவினுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டு வாழ்த்தினார். மேலும் விஜய் டிவி புகழும் கவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

தன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் கவின்.

இந்நிலையில் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வியக்காமல் இருக்க முடியவில்லை என கேப்ஷன் போட்டிருக்கிறார் லோஸ்லியா.

View this post on InstagramA post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)
அதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

கவினுக்கு நல்ல மனைவி கிடைத்துவிட்டார். நீங்கள் இப்படியே வியந்து கொண்டே இருங்கள். ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை இழந்துவிட்டீர்கள்.

கவின் மாதிரி ஒரு ஆள் உங்களுக்கு கிடைக்கவே மாட்டார். கவின் திருமணம் உங்களுக்கு தான் லாஸ். கவின்லியா ஆர்மியில் இருப்பதால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கவினை பிரிந்தது லோஸ்லியாவின் தனிப்பட்ட விஷயம். அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும்போது லோஸ்லியாவை விமர்சிப்பது தவறு. அவரை குறை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என லோஸ்லியா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கவினுக்கு திருமணம் நடந்ததில் அவரின் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக மோனிகா தன் அருகிலேயே இருந்தும் அவரின் காதலை உணராமல் வேறு இடத்தில் தேடியிருக்கிறார் கவின். இறுதியில் தான் அவருக்கு புரிந்திருக்கிறது.

கவின் கதையை பார்க்கும்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் நினைவுக்கு வருகிறது. கவினின் தாய்க்கிழவி மோனிகா. இத்தனை ஆண்டுகளாக கவினுக்காக பொறுமையாக காத்திருந்த மோனிகா இனி அவரின் வாழ்க்கையை அழகாக்குவார் என்கிறார்கள் ரசிகர்கள்.

காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட கவின்: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

ஒரு வெற்றிப்படமாவது கொடுத்த பிறகே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும். அதுவரை திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருந்தார் கவின்.

கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்த டாடா படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. படம் பார்த்த அனைவரும் கவினின் நடிப்பை பாராட்டினார்கள்.

காதலியே மனைவியாக பெற்ற அதிர்ஷ்டசாலி கவின்

டாடா ஹிட்டான சந்தோஷத்தில் தான் மோனிகாவை திருமணம் செய்திருக்கிறார் கவின். தற்போது கவின் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.