Vidaa Muyarchi: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தை கைவிட்ட லைகா?

விடாமுயற்சி படம் அவ்வளவு தான் என ஆளாளுக்கு பேசத் துவங்கிய நிலையில் உண்மை வெளியாகியுள்ளது.

​விடாமுயற்சி​மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தான் துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்க, விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் கைவிட்டுவவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது.கிங்​ஜெயிலர் – முதல்வர்கள் கொண்டாடும் வெற்றி- வசூல் ராஜாவான ரஜினி​​கைவிடப்பட்டதா?​விடாமுயற்சி குறித்து லைகா நிறுவனம் எந்த அப்டேட்டும் வெளியிடாத நிலையில் படம் கைவிடப்பட்டதாக எழுந்த பேச்சை அனைவரும் நம்பிவிட்டார்கள். இந்நிலையில் தான் படம் கைவிடப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். படப்பிடிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​செப்டம்பர்​வரும் செப்டம்பர் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார் மகிழ்திருமேனி என தகவல் வெளியாகியிருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பெரும்பாலான காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறார்களாம். மேலும் வெளிநாடுகளில் சில காட்சிகளை படமாக்குகிறார்களாம்.
​படப்பிடிப்பு​விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என்றார்கள். அஜித் குமாரின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதம் என்றார்கள். பின்னர் ஜூலை என்றார்கள். ஆகஸ்ட் இரண்டாவது வாரம் என்றார்கள். தற்போது செப்டம்பர் மாதம் என கூறப்படுகிறது. செப்டம்பரில் ஷூட்டிங் துவங்குகிறது என லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிப்பு வெளியிடும் வரை எதையும் நம்ப முடியாது.
​பைக் டூர்​முன்னதாக விடாமுயற்சி படப்பிடிப்பை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டார் மகிழ்திருமேனி. அதனால் நவம்பர் மாதம் உலக டூர் கிளம்புவதாக தெரிவித்தார் அஜித் குமார். ஆனால் படப்பிடிப்பை துவங்க தாமதமாகி வருவதால் அவ்வப்போது பைக்கில் டூர் சென்று வந்து கொண்டிருக்கிறார். அவர் பைக்கில் வெளிநாடுகளில் வலம் வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஷாலினி.
​ரசிகர்கள்​விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கிவிட்டால் விறுவிறுப்பாக நடத்தி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியிடத் தான் திட்டம். ஆனால் அதற்கு படப்பிடிப்பு துவங்க வேண்டுமே. அஜித் தான் டூர் சென்று கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு துவங்குவதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் தான் வந்திருக்கிறது. விடாமுயற்சியும் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
​சந்திப்பு?​அஜித் அண்மையில் ஜெர்மனி, நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அதே நேரத்தில் விஜய்யும் நார்வேக்கு சென்றிருக்கிறார். அப்படி என்றால் அங்கு விஜய்யும், அஜித் குமாரும் சந்தித்துக் கொண்டார்களா என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். விஜய்யும், அஜித்தும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் யாரும் அஜித்தை சீண்டக் கூடாது என தன் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.

​ஏன் கால்ல விழுற, அறிவில்ல, அடிமைத்தனத்தை ஏன் தொடர்ந்து செய்ற?: பா. ரஞ்சித்தின் வைரல் வீடியோ

​அஜித்-விஜய்​லியோவை அடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார் விஜய். முன்னதாக அஜித் குமாரை வைத்து மங்காத்தா படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அதனால் தளபதி 68 படத்தில் அஜித்தை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அஜித், விஜய்யை சேர்த்து இயக்க வெங்கட் பிரபுவுக்கும் ஆசை தான்.

​Kavin: வியக்காமல் இருக்க முடியல: கவின் திருமணத்தன்று போஸ்ட் போட்ட லோஸ்லியா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.