Xiaomi 13T Pro-ல் வேற லெவல் கேமரா இருக்காம்?! அதிநவீன ப்ராசஸர் மற்றும் சிறப்பம்சங்களும் இருக்கு!

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக வலம்வரும் Xiaomi நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான Xiaomi 13T Pro மாடல் விரைவில் வெளியாக உள்ளது. அதற்குள் Xiaomi 13T Pro மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக Xiaomi 13T Pro மாடல், ரெட்மி K60 அல்ட்ரா மொபைல் போலவே இருப்பதாகவும் டெக் பிரபலங்கள் கூறுகின்றனர். ஆனால், இதன் கேமராக்கள் மற்ற மொபைல்களை விட அதிக திறன்மிக்கதாக உள்ளதாகவும் கூறுகின்றனர். அதன் இதர சிறப்பம்சங்கள் எப்படி இருக்கும் என்றும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பார்க்கலாம்.

Xiaomi 13T Pro-ல் அதிநவீன ப்ராசஸர்Xiaomi 13T Pro மொபைலில் அதிநவீன MediaTek Dimensity 9200+ ப்ராசஸர் இடம்பெறலாம் என்று டெக் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன்மூலம் மல்டி டாஸ்கிங் செயல்பாடுகளை இடையூறு இல்லாமல் செய்வதற்கு உதவும் என்றும் கூறியுள்ளனர்.
கேமரா வசதிகள்Xiaomi 13T Pro-ல் பின்புறம் Sony IMX707 சென்சாருடன் கூடிய 50 மெகாபிக்ஸல் கேமரா , 50 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ மற்றும் முன்புறம் 13 மெகாபிக்ஸல் கேமராவும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கேமராக்கள் கட்டிங் – எட்ஜ் டிசைனில் இடம்பெற்றுள்ளதாம்.
பேட்டரி திறன்Xiaomi 13T Pro மொபைலில் 5000mAh பேட்டரி திறன் மற்றும் 120W வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
Xiaomi 13T Pro டிஸ்பிளே6.67 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 1200p ரெசல்யூஸன் வசதியோடு இடம்பெறலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
நிறங்கள்Xiaomi 13T Pro மொபைல் முதல்கட்டமாக கருப்பு மற்றும் நீளம் ஆகிய நிறங்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.