அம்மா வீட்ல இல்லன்னா நிம்மதியா இருக்கும்: ரம்யா கிருஷ்ணன் பற்றி மகன் ரித்விக் கலகல பேட்டி.!

தமிழ், தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். ‘படையப்பா’ படத்திற்கு பிறகு ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் ரித்விக்கும் இணைந்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் குக் வித் கோமாளி பாலாவின் பல கலகலப்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன் மகன் ரித்விக். எடுத்தவுடனே உங்க அம்மாவை எவ்வளவு பிடிக்கும் என கேட்டதற்கு, ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்ல டார்ச்சர் பண்ணுவாங்க என சொல்லி ஆரம்பமே அமர்களப்படுத்திவிட்டார். இது பண்ணாத. அது பண்ணாதன்னு ஒரே அட்வைஸ் என மகன் சொல்ல, எது பண்ணாதன்னு சொன்னேன் என சிரித்து கொண்டே கேட்டார் ரம்யா கிருஷ்ணன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதற்கு அவர் ஜன்ங் புட் எல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்வாங்க என்கிறார். இது எப்படியோ எல்லார் வீட்லயும் சொல்ற ஒன்னு தானே. மேலும் தன்னுடைய அம்மாவிடம் பிடிக்காத விஷயம் பற்றி சொல்லும் போது, ‘பாகுபலி’ படத்துல வர்ற மாதிரி கண்ணாலயே மிரட்டுவாங்க என்றார். அதனை தொடர்ந்து அம்மா பண்ணதுலயே உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் என்ன என பாலா கேட்கும் போது, எல்லாருக்கு பிடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தையே அவர் மகனும் கூறினார்.

மேலும் அம்மா அவுட்டோர் ஷுட்டிங் போறப்ப எவ்வளவு மிஸ் பண்ணுவீங்க என பாலா கேட்ட போது, முன்னாடியெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஆனா இப்பலாம் நிம்மதியாய் இருக்கும் என அவர் சொல்ல ரம்யா கிருஷ்ணன் ஷாக் ஆகிவிட்டார். அரங்கில் இருந்தவர்களும் ஒரே கைத்தட்டல். உடனே அவர், ஜோக் தான். ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றார்.

Jailer: ரஜினியிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய ரம்யா கிருஷ்ணன்: அரங்கை அதிர வைத்த ரசிகர்கள்.!

உடனே ரம்யா கிருஷ்ணன் ஜோக் எல்லாம் இல்லை. உண்மைதான். முன்னாடியெல்லாம் அவுட்டோர் ஷுட்டிங் போறப்ப எப்ப வருவன்னு கேட்பான். இப்போலாம் எப்ப அவுட்டோர் ஷுட்டிங். எப்போ போறான்னு கேட்குறான் என தன் பங்குக்கு மகனை கலாய்த்து அவரும் அரங்கை கலகலப்பாக்கிவிட்டார். அதன்பின்னர் அம்மாவிடம் பொய் சொல்வது பற்றி பேசும் போது, நான் பொய் சொல்லணும் நினைக்கும் போதே கண்டுபிடிச்சுருவாங்க என்றார்.

மேலும் இப்போலாம் அம்மா தான் எனக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எல்லாம் அனுப்புறாங்க. ஓபன் பண்ண மாட்டேன். ஒரே பூமர் ரீல்ஸ் அனுப்புவாங்க என்று வேறு சொல்லி தனது அம்மா ரம்யா கிருஷ்ணனை கலாய்த்து தள்ளிவிட்டார். அதனை தொடர்ந்து அம்மாக்கிட்ட கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ் பற்றி சொல்லும் போது, எப்பவும் நேர்மையாய் இருக்கணும் சொல்வாங்க என்கிறார்.

‘தங்கலான்’ மேஜிக்.. சம்பவம் செய்துள்ள பா. ரஞ்சித்: மரண மாஸ் அப்டேட்.!

இதெல்லாம் ஒரு அட்வைஸா என நினைக்க வைப்பது தூங்க போக சொல்வது தான் என்று கூறியுள்ளார். இதனையடுத்து தன் மகனை பற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன், நல்ல பையன். நல்ல மனுஷன் என சொல்லி நெகிழ வைத்துவிட்டார். ரம்யா கிருஷ்ணனும், அவரது மகனும் இணைந்து அளித்துள்ள இந்த கலகலப்பான பேட்டி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.