பாகு: அஜர்பெய்ஜானில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷில் தொடர் நடக்கிறது. இதில் உலக தர வரிசையில் 22 வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் முதலிடத்தில் உள்ள நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் விளையாடினர்.
கிளாசிக்கல் முறையிலான இரண்டு போட்டிகள் கொண்ட போட்டியில் முதல் நாள் ஆட்டம் டிரா ஆனது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து நாளை (24 ம் தேதி) டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது.
இது வரையில் இருவரும் 20 போட்டிகளில் மோதி உள்ளனர். இதில் கார்ல்சன் 8 முறையும், பிரக்ஞானந்தா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 7 போட்டிகள் டிரா ஆகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement