வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படியொரு கதையில் நடிக்கவிருந்த ஜிவி பிரகாஷ்: இது மட்டும் நடந்திருந்தா..

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த ஜிவி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ‘அடியே’ படம் ரிலீசாகி இருக்கிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இயக்கத்தில் ‘அடியே’ என்ற படம் உருவாகியுள்ளது. அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படம் தொடர்பான புரமோஷன் ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் வெற்றிமாறனின் ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் இடம்பெறும் பாடல்கள், பின்னணி இசைகள் ரசிகர்களிடம் தனிக்கவனம் பெறுவது வழக்கமான ஒன்று. வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இந்நிலையில் ‘அடியே’ படத்தின் புரமோஷனுக்கான பேட்டி ஒன்றில் பேசியுள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், வெற்றிமாறன் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்க இருந்தேன். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அது நடக்கவில்லை. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் 3 – 4 ஆண்டுகளுக்கு பிசியாக இருக்கிறார். எதிர்காலத்தில் எப்போவதாவது இந்தப்படம் உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.

ரோலக்ஸ் சாராக ஜிவி பிரகாஷ்.. விஜய்யின் ‘யோகன்’: பட்டையை கிளப்பும் ‘அடியே’ ட்ரெய்லர்.!

ஜிவி பிரகாஷ் குமார் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்தப்படம் மட்டும் நடந்திருந்தா செம்மையா இருந்திருக்கும் என கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் வெற்றிமாறன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தாலே வேறலெவலில் இருக்கும். அவரது படத்தில் ஜிவி நடித்திருந்தால் மாஸா இருந்திருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமாரின் ‘அடியே’ படத்தில் ’96’ பட பிரபலம் கெளரி கிஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற ‘திட்டம் இரண்டு’ பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ‘அடியே’ படத்தை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் வரும் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran: தரமா ஒரு சம்பவம்.. ‘வாடிவாசல்’ பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன வெற்றிமாறன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.