Moto G84 5G : மூன்று நிறங்களில் வெளியாகும் மோட்டோ G84 5G! இணையத்தில் கசிந்த மாடல் போட்டோக்கள் மற்றும் சிறப்பம்சங்கள்!

மூன்று வகை நிறங்கள் மற்றும் அட்டகாசமான டிசைன் என பல்வேறு புதிய அப்டேட்டுகளோடு களம் இறங்க உள்ளது மோட்டோவின் அடுத்த தயாரிப்பான Moto G84 5G மொபைல். இதன் மாதிரி டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இணையத்தில் கசிய விட்டுள்ளனர் லீக்ஸ்டர்கள் சிலர். அதன் முழுவிவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

​Moto G84 5G வெளியீடுMoto G84 5G உலக அளவில் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக டிப்ஸ்டர் முகுல் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மொபைலில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்த ஒரு சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
Moto G84 லீக்ஸ்டர் தகவல்கள்​​​Moto G84 5G டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ்Moto G84 5G மொபைலில் 10-bit 120Hz pOLED டிஸ்பிளே இடம்பெறலாம் என்று முகுல் ஷர்மா கூறியுள்ளார். அதேபோல் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ள படங்களில் hole – punch டிசைன் டிஸ்பிளே இருப்பது போன்று வெளியாகியுள்ளது. டிஸ்பிளே உள்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டது போல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
​கேமராMoto G84 5G கேமராவை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா லெட் ஃபிளாஷ் வசதியோடு வழங்கப்பட்டுள்ளது போல் வெளியாகியுள்ள படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக OIS வசதியுடன் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் கேமரா பொறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
​நிறங்கள் மற்றும் இதர விவரங்கள்டிப்ஸ்டர் evleaks வெளியிட்டுள்ள படங்களின்படி, Moto G84 5G கருப்பு, சிவப்பு, க்ரே ஆகிய கலர்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான Moto G82 5G மற்றும் Moto G73 ஆகிய மொபைல்களை விட அப்டேட் செய்யப்பட்டு இது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.