சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். லோகேஷின் ஆல்டைம் ஃபேவரைட்டான மன்சூர் அலிகானும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில், லியோ படம் பற்றியும் விஜய்யுடன் நடித்தது குறித்தும் மன்சூர் அலிகான் பேசியது வைரலாகி வருகிறது.
