இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனையின் 5வது சுற்று கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளனர்.

அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உட்பட பரஸ்பரம் ஆர்வங்கள் பகிரப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியன இந்த ஆலோசனைகளின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 4வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2018 பெப்ரவரி 28ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.