24GB ரேம் வசதி, அதிநவீன கேமராக்கள் மற்றும் ப்ராசஸர் வசதியோடு ஆகஸ்ட் 28ம் தேதி சீனாவில் வெளியாக இருக்கும் Realme GT 5 மொபைலின் அதிகாரபூர்வ போட்டோக்கள் மற்றும் விவரங்கள் சிலவற்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி Realme GT 5 மொபைலுக்கு இடம்பெறவுள்ள சிறப்பம்சங்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Realme GT 5 அதிகாரபூர்வ டிசைன்Realme மொபைலின் GT 5 மாடல் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தில் மெட்டாலிக் சில்வர் பாடியில் இரண்டு பெரிய கேமரா வளையங்கள் Realme நியோ 3-யில் உள்ளது போலவே லெட் லைட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. மேலும், 240W GaN சார்ஜிங் வசதி குறித்த அறிவிப்பையும் அதில் காணமுடிகிறது. இந்நிலையில், இந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த மொபைலில் இடம்பெற போகும் ஒரு சில சிறப்பம்சங்களின் எதிர்பார்ப்பு பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
ப்ராசஸர்ரியல்மீ வெளியிட்டுள்ள அறிவிப்பில் Snapdragon 8 Gen 2 லோகவையும் காணமுடிகிறது. எனவே, Realme GT 5-ல் அதிநவீன ப்ராசஸரான Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இடம்பெறும். இந்த தகவலை ஏற்கனவே அந்நிறுவனத்தின் தலைவர் சூ குய் சேஸ் சமூக ஊடக பதிவு மூலம் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Realme GT 5 பேட்டரிRealme நிறுவனத்தின் அறிவிப்பின் படி, இதில் 240W GaN சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு 30 நொடிகளுக்கு சார்ஜ் செய்து 2 மணிநேரம் போன் உபயோகப்படுத்தலாம் என்றும் அந்நிறுவன தெரிவித்துள்ளது. அதே சமயம், எந்த பேட்டரி இடம்பெறும் என்பது குறித்தான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏற்கனவே டிப்ஸ்டர்கள் கூறிய தகவல்களின்படி இதன் நீடித்த செயல்பாட்டிற்காக 4,600mAh திறன் கொண்ட பேட்டரி 240W சார்ஜிங் வசதி அல்லது 5240mAh பேட்டரி 150W சார்ஜிங் வசதி இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளே, கேமரா மற்றும் டிசைன்ரியல்மீ நிறுவனம் தனது புதிய அறிவிப்பில் டிஸ்பிளே குறித்தான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால், ஏற்கனவே டிப்ஸ்டர்கள் கணிப்பு படி, இதில் 6.74-inch 1.5k OLED டிஸ்பிளே இடம்பெறும் எனவும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், Sony IMX890 சென்சாருடன் கூடிய 50MP கேமரா, 8MP கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபீ கேமரா இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
ஸ்டோரேஜ் வசதி மற்றும் விலைஅந்நிறுவனத்தின் தலைவர் ஏற்கனவே கொடுத்த தகவலின்படி இதன் ஸ்டோரேஜ் வசதி 24GB ரேம் மற்றும் 1TB வரை வழங்கப்படலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மீ தற்போது வெளியிட்ட புதிய அப்டேட்டிலும் அதே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விலை குறித்து எந்த தகவலும் இல்லை.