சென்னை: ரியல்மி 11X 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அண்மையில் அறிமுகமானது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 11X 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மி 11X 5ஜி சிறப்பு அம்சங்கள்
- 6.72 இன்ச் ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- ஆக்டா-கோர் 6nm மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ சிப்செட்
- 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 5,000mAh திறன் கொண்ட பேட்டரி
- 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 64 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
- இந்த போனின் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Meet the majestic purple dawn design of the #realme11x5G with a revolutionary chipset and leap-forward features! #LeapUpWith5G.
Starting at ₹ 13,999/-*
Know more: https://t.co/pfnyKqC0Lb pic.twitter.com/jKo3mPuOi3
— realme (@realmeIndia) August 23, 2023