கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… வெறும் 5 மணி நேரத்தில்… எகிறிய மில்லியன் டாலர் எதிர்பார்ப்பு!

கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையில் தினமும் சராசரியாக 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிவேகமாக பயணம் செய்வது ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் (CBE RJT Express). 385 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மற்ற ரயில்கள் 7 முதல் 8 மணி வரை பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் சிறப்புமிக்க டபுள் டெக்கர் ரயிலும் (CBE SBC Uday Express) இயக்கப்படுகிறது.

டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்இதில் இரண்டு அடுக்குகளாக பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். இது 7 மணி வரை பயணிக்கிறது. எனவே விரைவு பயணத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் ஐடி நகரம் என்று பெங்களூருவும், தொழில் நகரம் என்று கோவையும் அழைக்கப்படுகின்றன. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிகவும் முக்கியமான நகரங்கள். தற்போது ஐடி நிறுவனங்கள் பலவும் கோவையில் தடம் பதித்து வருகின்றன.​பெங்களூரு சிட்டிஇவை ஏற்கனவே பெங்களூருவில் கால் பதித்து விட்டது கவனிக்கத்தக்கது. மேலும் கோவை, திருப்பூர் நகரங்களில் மேற்கொள்ளப்படும் ஜவுளி உற்பத்திக்கு பெங்களூரு நகரில் மிகப்பெரிய விற்பனை சந்தை காத்திருக்கிறது. எனவே வேலை, தொழில், கல்வி, சுகாதாரம் எனப் பல்வேறு விஷயங்களுக்காக இரு நகரங்களுக்கும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இதுதவிர பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை பற்றி சொல்லவே தேவையில்லை.
​வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைஎனவே விரைவான பயணம் என்பது பொதுமக்களுக்கு பல்வேறு விதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை, பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் ஒன்றரை மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 5 மணி நேரத்தில் சென்றடைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
எந்தெந்த வழித்தடம்இரு நகரங்களுக்கும் இடையில் ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய முக்கியமான நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நின்று செல்லும் வகையில் அறிவிப்பு வெளியானால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர். தற்போது பகல் நேர ரயிலாக மட்டுமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இருக்கை வசதிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
​டிக்கெட் கட்டண விவரம்படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கோவை டூ பெங்களூரு கட்டணம் என்று பார்த்தால் ஏசி சேர் கார் வகுப்பில் 1,315 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் சேர் கார் வகுப்பில் 2,275 ரூபாயும் இருக்கக் கூடும். இதனுடன் உணவும் சேர்ந்தால் கட்டணம் அதிகரிக்கும். சமீப காலமாக 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தான் பயன்பாட்டிற்கு வருகின்றன.
​மில்லியன் டாலர் எதிர்பார்ப்புஅதன்படி, கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அப்படியே இருக்கும் எனத் தெரிகிறது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நெல்லை டூ சென்னை அடுத்தகட்டமாக பயன்பாட்டிற்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து கோவை டூ பெங்களூரு சேவை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.