வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அரசியல்வாதிகள், குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசின் அமலாக்கத் துறை குறித்து அதிகம் பீதியடைந்து உள்ளனர். இந்த துறையின் தலைமை அலுவலகம் புதுடில்லியில் உள்ளது. தமிழக அரசியல்வாதிகள் குறித்த விவகாரங்களை, இத்துறையின் கூடுதல் இயக்குனர் கவனித்து வருகிறார். தமிழகத்தில் நடைபெறும் சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள், விசாரணைகளை இவர் தான் கண்காணித்து வருகிறார்.
இவர், ஓய்வின்றி வேலை பார்த்து வருகிறாராம். காரணம், தமிழக அரசியல்வாதிகள் மீதுள்ள வழக்குகள் தான். இப்போது, இவருடைய மேஜையில் புதிய ‘ரெய்டு லிஸ்ட்’ உள்ளதாம்.
இந்த லிஸ்டில், 18 தமிழக சீனியர் அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாம். இவர்கள் அனைவருமே தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, எப்போது ரெய்டு நடத்தலாம் என திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
இந்த தி.மு.க., தலைவர்களுக்கு, செப்டம்பர்- – அக்டோபர் மாதங்களில் பெரிய பிரச்னை வர உள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய போது, ‘நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க’ என பா.ஜ., அரசை எச்சரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘வீடியோ’ வெளியிட்டிருந்தார். அமலாக்கத்துறை வைத்திருக்கும் புதிய லிஸ்ட் படி, தி.மு.க., தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது, இப்படி இன்னும் பல வீடியோக்களை அவர் வெளியிட நேரிடும் என சிலர் கிண்டலடிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement