மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு! இதை மிஸ் பண்ணிடாதீங்க!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு இயந்திரம் வேகம் காட்டி வருகிறது. ஒரு கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் பிரம்மாண்ட திட்டம் என்பதால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாம், கடந்த வாரம் மூன்று நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் ஆகியவை முடிவடைந்த நிலையில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிராகரிக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள்!ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறைந்தது 63 லட்சம் பேர் நிராகரிக்கப்பட உள்ளனர். ஆவணங்களை சரிபார்க்கும் போதே கணிசமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. நேரடி கள ஆய்வுக்குப் பிறகு சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
எவ்வாறு மீண்டும் விண்ணப்பிப்பது?ஒரு கோடி பேர் பயனாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளநிலையில் நிராகரிக்கப்படுபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாமா, விண்ணப்பமே வழங்காத பலர் அரசின் தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலில் வரக்கூடும், அவர்கள் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளி வருகின்றன.
மேல்முறையீடு வாய்ப்பு!அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலில் வரக்கூடியவர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதே சமயம் தகுதி இல்லாதவர்கள் கட்டாயம் பயனாளர்கள் பட்டியலில் வரமாட்டார்கள். தவறுதலாக சிலரது பெயர்கள் விடுபட்டாலும் மீண்டும் மேல்முறையீடு செய்து திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பும் வழிமுறைகளும் உள்ளன.
30 நாள்களுக்குள் செய்ய வேண்டும்!மகளிர் உரிமைத் தொகை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும், அதன் வழிமுறைகள் என்ன, யாருக்கு என்ன பொறுப்பு என்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அந்த வகையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் இணையதளம் மூலமாகவும், இ சேவை மையங்கள் மூலமாகவும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். சரியான ஆவணங்கள் வைக்கப்பட்டால் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.வருவாய் கோட்டாட்சியரின் பணி!அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் மேல் முறையீட்டு அலுவலர்களாக செயல்படுவார்கள். இணையதளம் மூலம் வரும் மேல்முறையீடுகளை அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் ஒப்பிட்டு சரிபார்த்து ஒப்புதல் வழங்கப்படும். தேவைப்பட்டால் கள ஆய்வும் மேற்கொள்ளப்படும். எனவே செப்டம்பர் 15க்குள் தங்கள் பெயர் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
ஒரு கோடி பேரில் உங்கள் பெயர் இருக்கிறதா?​​
ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் இருந்தால் இதிலிருந்து ஒரு கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என்பது பொருள் அல்ல. இதிலிருந்து தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அது ஒரு கோடிக்கு அதிகமாக இருக்காது என்பது மட்டும் உறுதி. தகுதி வாய்ந்தவர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.