DIAL எனப்படும் டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் மூலம் இயக்கப்பட்டு வருவது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGI). இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு விமான நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. என்ன விஷயம் என்றால், உள்நாட்டு விமான சேவையை குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அதாவது, வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
டெல்லியில் ஜி20 மாநாடு
உச்ச நீதிமன்றத்தை ஒட்டி அமைந்துள்ள பிரகதி மைதானில் இருக்கும் ஐடிபிஓ காம்ப்ளக்ஸில் ஜி20 மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களுக்கு டெல்லியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்படும்.
மூன்று நாட்கள் விடுமுறை
மேலும் வணிக நிறுவனங்கள், வர்த்தக செயல்பாடுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களும் மூன்று நாட்கள் மூடப்பட்டிருக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏனெனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உலகத் தலைவர்கள் வருகை புரியவுள்ளனர். இவர்களுக்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உள்நாட்டு விமான சேவை ரத்து
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையை ரத்து செய்ய இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கோரிக்கை வந்துள்ளது. அதன்படி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 80 விமானங்கள், டெல்லிக்கு வருகை தரும் 80 விமானங்கள் என 160 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பார்க்கிங் வசதி
அதேசமயம் சர்வதேச விமான சேவையில் எந்த சிக்கலும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து DIAL அளித்துள்ள விளக்கத்தில், இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். பார்க்கிங் வசதிக்காக உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்படவில்லை.
டெல்லியில் கட்டுப்பாடுகள்
ஏனெனில் போதிய பார்க்கிங் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. விமான சேவையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நடவடிக்கையாக மேற்குறிப்பிட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தை முடிந்தவரை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.
பிரதமர் மோடி மன்னிப்பு
முன்னதாக ஜி20 மாநாட்டை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். பல இடங்களுக்கு செல்ல முடியாது. இவையெல்லாம் நமது விருந்தினர்களை வரவேற்கவே. எனவே முன்கூட்டியே வருத்தம் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.