திருவண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் ஈட்டி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார். இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு […]
