வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் : மும்பை சாலை போக்குவரத்து.. வெளியானது சூப்பர் அப்டேட்!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து தானே மற்றும் நாசிக் செல்லும் சாகேத் பாலம் சீரமைப்பு சரிசெய்யப்பட்டது.

மும்பை – நாசிக் செல்லும் சாலையின் இடையே உள்ள சாகேத் பாலம் அந்த வழித்தடத்தில் உள்ள முக்கியமான பாலமாகும். இந்த பாலத்தின் வழியாகவே நாசிக், குஜராத், மற்றும் நேரு துறைமுகங்களுக்கு செல்ல முடியும். சாகேத் பாலத்தில் மேலே உள்ள சிமெண்ட் கட்டைகள் பழுதடைந்து ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.

பாலத்தில் விரிசல் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த வாரம் திடீரென போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மும்பை மற்றும் கோட்பந்தரில் இருந்து நாசிக் மற்றும் ஜவகர்லால் நேரு துறைமுகம் செல்லும் கனரக வாகனங்கள் ஐரோலி பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன. அதே சமயம் டூ விலர் போன்ற இலகு ரக வாகனங்கள் மட்டும் ஒரு வழிப் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் கோட்பந்தர் சாலையில் கடும் வாகன நெரிசல் உண்டானது.

ஓடோடி உதவிய பிடிஆர் : அந்த மனசுதான் சார் கடவுள்.. துயரத்திலும் உருகிய உ.பி மக்கள்!

பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். பாலத்திலுள்ள இரண்டு தூண்களுக்கு இடையே இணைப்பாக பயன்படுத்தப்படும் 4×7 மீட்டர் ஸ்லாப்பில் கோளாறு இருப்பதை பொறியாளர்கள் கண்டறிந்தனர். இதுதான் பாலத்தின் மேலே வாகனங்கள் செல்லும்போது குஷன் போல தாங்கி நிற்கிறது.

மறுசீரமைப்பு குழுவினர் சுமார் 25 டன் எடையுள்ள ஸ்லாப்பை தூக்கி என்ன கோளாறு உள்ளது என்பதை கண்டறிந்தனர். எவ்வளவு சதவிகிதம் சேதமடைந்துள்ளது என்பதை அளவீடு செய்து, அதனை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கினர்.

சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு பாதுகாப்பான சாலை என சான்று அளித்தனர்.

இந்த நிலையில்தான் மும்பை – நாசிக் இடையேயான சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். முன்னதாக மும்பை – கோவா இடையேயான சாலையில் அடுத்த மாதம் வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என அரசும் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.