வாடகை கொடுக்கவே காசில்லை… போகிற போக்கில் அண்ணாமலையை சீண்டிய சீமான்

மக்களவைத் தேர்தல் வரவுள்ளதை முன்னிட்டு அதற்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். பிரதமர் போட்டியிடாவிட்டால் நான் தேர்தலில் நிற்க மாட்டேன். சட்டமன்ற தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்று விளக்கினார். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அப்படி என்றால் 2 கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதானே பொருள். சரி இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார் என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தது திமுக. ஆனால், கூட்டணி ஆட்சி நடந்ததால் நீட்டை அமல்படுத்த முடியவில்லை. ஆனால், பாஜக பெரும்பான்மையோடு வந்ததால் நீட்டை அமல்படுத்தியது என்றும் கூறினார். பாஜக அமலாக்கத் துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்பதை யாறும் மறுக்க முடியாது. 6 அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் மீது ஏன் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று என கேள்வி எழுப்பினார்.

விஜயலட்சுமி அளித்தது புகாராக இருந்தால் என் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். பொய்யாக இருந்ததால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கென மனைவி, மகன்கள் உள்ளனர். இதுபற்றி எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நான் அமைதியாக கடந்து போகவே விரும்புகிறேன் என்றும் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர் என்றும் கூறினார்.

நான் திமுகவை ஆதரிக்கிறேன் – சீமான்

தமிழ்நாட்டில் தனிநபர் வருமான உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “யாருடைய தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. எனக்கெல்லாம் வாடகை கொடுக்கவே இல்லை” என்று பதிலளித்தார். அருகிருந்த ஒருவர் உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லையா எனக் கேட்க அரங்கமே அதிரும்படி சிரித்த சீமான், எதையாவது சொல்லி வைக்க வேண்டியதுதான் என அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்தார்.

தனது செலவுகளை நண்பர்களே ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், அதனை ஒருவர் மறைமுகமாக கமெண்ட் அடிக்க அதற்காகத்தான் சீமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.