Samsung Galaxy S24 Ultra மொபைலில் 2TB ஸ்டோரேஜ், 6.78இன்ச் டிஸ்பிளே, இரண்டு வேரியண்ட் ப்ராசஸர்! புது அப்டேட்!

Samsung S24 அல்ட்ரா குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டிப்ஸ்டர்கள் Tech_Reve மற்றும் ICE UNIVERSE ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் Samsung s24 Ultra – ல் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்து தகவல்களை கசிய விட்டுள்ளனர். குறிப்பாக அதன் ஸ்டோரேஜ், டிஸ்பிளே குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, Samsung s24 Ultra – ல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

​Samsung s24 Ultra ப்ராசஸர்Samsung s24 Ultra இரண்டு வேரியண்ட்டுகளில் வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார் ஐஸ் யுனிவெர்ஸ். அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, Exynos 2400 மற்றும் Snapdragon 8 Gen 3 ஆகிய ப்ராசஸர்களோடு வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
​Samsung S24 கேமரா மற்றும் பேட்டரிடிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, OIS வசதியோடு கூடிய 200 மெகாபிக்ஸல் மெயின் கேமரா, 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 12 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ கேமரா , 50 மெகாபிக்ஸல் பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
​Samsung s24 Ultra டிஸ்பிளேSamsung s24 Ultra மொபைலில் 6.78 இன்ச் OLED டிஸ்பிளே WQHD+ ஸ்க்ரீன் மற்றும் Quad HD+ 3120 x 1440 pixels ரெசல்யூஸன், aspect ratio of 19:5:9 ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார் ICE UNIVERSE. 2500நிட்ஸ் ப்ரைட்னஸும் வழங்கப்பட்டுள்ளது.
​Samsung s24 Ultra ஸ்டோரேஜ்டிப்ஸ்டர் Tech_Reve வெளியிட்டுள்ள தகவலின்படி, 2TB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறும் என்ற செய்தி வழங்கியுள்ளது. மேலும், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ், 12GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் இடம்பெறலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.