டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டரின் உரிமையாளர் எலன் மஸ்க் உலகெங்கும் புகழ்பெற்ற பணக்காரராக மட்டும் இல்லாமல், அவருடைய சொந்த சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவரை அவரே காலாய்த்துக்கொள்ளும் மீம்களை வெளியிடுவதை கூட பார்த்திருப்போம். வேறு யாராவது ட்ரோல் செய்தாலும் அதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனநிலை அவருக்கு பல ரசிகர்களையும் கொண்டு வந்தது.
இதயனிடையே எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியர் வால்டர் ஐசக்சன் சமீபத்தில் வெளியிட்டுள்ள படம் ஒன்று அப்போது இணையத்தில் வைரலானது. அதில், அந்த புகைப்படத்தில், தொழிலதிபரான எலான் மஸ்க், இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் இருந்தனர். எலான் மஸ்க் தனது இரட்டைக் குழந்தைகளுடன் இருப்பதைப்போன்று வெளியான முதல்படம் இதுவே ஆகும்.
எலான் மஸ்க்கின் பிரெயின் சிப் தயாரிப்பு நிறுவனமான நியூராலிங்க்கின் தலைமை செயல் அதிகாரி ஷிவோன் ஸிலிஸ் வீட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஷிவோனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் 2021 நவம்பர் மாதம் இரட்டைக் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் இவ்வளவு நாட்கள் எலோன் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் தம்பதியினருக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை இருப்பது வெளிவராத நிலையில், தற்போது எலோன் மஸ்க்கின் சுய சரிதை நூல் வெளிவர இருக்கும் இந்த சூழலில் மூன்றாவது குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எலோன் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் மூன்றாவது குழந்தையை ரகசியமாக வரவேற்பதுடன் அந்த குழந்தைக்கான புதிய தனிப்பட்ட சுயசரிதையை உருவாக்குகிறார்கள்.
மேலும் டெஸ்லா சிஇஓவின் புதிய வாழ்க்கை வரலாறு நூல் செப்டம்பர் 12 அன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது. எலோன் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் இருவரும் சேர்ந்து மூன்றாவது குழந்தையை ரகசியமாக வரவேற்க காத்திருக்கின்றனர். டெஸ்லா CEO பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்றின் அறிவிப்பாக இது இருக்கிறது.
இவரது மூன்றாவது குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்று தெரிகிறது. சனிக்கிழமையன்று தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட மதிப்பாய்வின்படி, வால்டர் ஐசக்சன் எழுதிய மஸ்க்கின் வாழ்க்கை வரலாறு நூல் வெளிவர இருக்கிறது. அதில் எலோன் மஸ்க், முன்னாள் தம்பதியருக்கு டெக்னோ மெக்கானிக்கஸ் என்ற புதிய மகன் இருப்பது அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு “டாவ்” என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை வரவிருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் எக்ஸ் CEO-வின் வாழ்க்கை வரலாறு குறித்த நூலில் குழந்தையின் பிறப்பு, அவரது வயது மற்றும் அவர் எங்கு பிறந்தார் என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் உள்ளதா என்பது பத்திரிகை வெளிவந்த நேரத்தில் தெளிவாகத் தெரியவில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
எலோன் மஸ்க்குக்கு எத்தனை குழந்தைகள்?
மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் தம்பதியினருக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை சேர்த்து மூன்று குழந்தைகள் உள்ளனர், அதாவது X Æ A-Xii, Exa Dark Sideræl Musk மற்றும் Tau Techno Mechanicus. இருப்பினும் மஸ்க்குக்கு மொத்தம் 10 உயிரியல் குழந்தைகள் உள்ளனர் கூறப்படுகிறது.