பாரதியின் 102-வது நினைவு தினம் | பாஜக ஆர்ப்பாட்டம் – News in photos

தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரை கண்டித்து கன்னியாகுமரி சுசீந்திரத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க-வினர்
முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது ஆய்வு கூட்டம்.
சென்னை:

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம்.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டில் நாடாளுமன்ற நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடியை விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் மீனவர் பகுதி குடியிருப்பு கட்டடத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில் மீனவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள காட்சி.
வேலூர் அடுத்த மேல்மொணவூா் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடந்து வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பழனி வழங்கினார்.
மதுரையில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ள மதிமுக மாநாடுக்கான பிரசார வாகனங்களை துரை வைகோ துவக்கி வைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
புதுச்சேரியில் ரூபாய் 7 கோடி செலவில் சாலை பணிகளை முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
திருநெல்வேலி:

பாரதியாரின் 102 வது நினைவு நாளையொட்டி, அவர் படித்த ம.தி.தா பள்ளியில் மாணவ மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

கடலூர்:

இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வலியுறுத்தி, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க -வினர் கைது.

பரமக்குடி:

இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பரமக்குடி:

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி .ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த சாமியாரை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சார்பாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம்.
பரமக்குடி:

இமானுவேல் சேகரனாரின் 66 -வது நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னை யானை கவுனி( எலிபன்ட் கேட்) மேம்பாலம் பணி ஆமை வேதத்தில் நடைபெறுகிறது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகைப் போராட்டம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.