வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹனோய்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமுற்றனர்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட கட்டடம், குறுகிய தெருவில் அமைந்துள்ளதால், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். 70க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
தீ விபத்தில் சிக்கி, 50 பேர் உயிரிழந்தனர். உயிரை காப்பற்றி கொள்ள மாடியில் இருந்து கீழே குதித்ததில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement