நளதமயந்தியாக கம்பேக் கொடுக்கும் பிரியங்கா நல்காரி
ரோஜா தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பிரியங்கா நல்காரி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். இதற்கிடையில் காதலருடன் அவசர அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்டு சில தினங்களிலேயே இனி நடிக்க வரமாட்டேன், குடும்பத்தை பார்த்துக் கொள்ள போகிறேன் என்று கூறிவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். ஆனால், அவர் மீண்டும் ஜீ தமிழ் சீரியலிலேயே கம்பேக் கொடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற தொடரில் ப்ரியங்கா நல்காரி ஹீரோயினாக நடிக்கிறார். அண்மையில் நளதமயந்தி தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ப்ரியங்கா நல்காரியின் ரீ-என்ட்ரியால் ரசிகர்களும் குதூகலம் அடைந்துள்ளனர்.