சாகல ரத்நாயக்க நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (13) காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று புதன்கிழமை காலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமானது.

தேர் வீதி உலா வருவதை பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பங்கேற்றார்.

பின்னர் ஆதீனத்தில் இந்துமத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.