சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஹானர், நுகர்வோர் மின் சாதனங்களான ஸ்மார்ட்போன், டேப்லேட் போன்றவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சீனாவின் அரசுத் துறை நிறுவனம் இது. கடந்த 2020-ல் ஹூவாய் நிறுவனத்திடம் இருந்து ஹானர் நிறுவன உரிமத்தை சீனா பெற்றது. இந்தச் சூழலில் ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று வண்ணங்களில் அறிமுகமாகி உள்ள இந்த போன் வரும் 18-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜெனரேஷன் 7 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 200 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.37,999
- 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.39,999
- விலையில் அறிமுகச் சலுகையும் இருக்கும் என தகவல்
Honor 90 5G display challenge!#HONOR90 pic.twitter.com/hFyXpF45j4
— TechUgly (@tech_ugly) September 12, 2023