Maruti Suzuki Dzire – மாருதி சுசூகி டிசையர் 25 லட்சம் விற்பனை இலக்கை கடந்தது

கடந்த 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி டிசையர் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக 15 ஆண்டுகளில் 25 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.

ரூ.6.51 லட்சம் முதல் ரூ.9.98 லட்சம் வரை விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

Maruti Suzuki Dzire

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு மூத்த செயல் அதிகாரி திரு ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா, “மாருதி சுசூகி நவீன தொழில்நுட்பம், புதுமையான அம்சங்கள் மற்றும் தயாரிப்புகளை அனைத்து பிரிவுகளிலும் வழங்க திட்டமிட்டுள்ளோம். டிசையர் என்பது மாருதி நிறுவனத்தின் திறமையை உறுதிப்படுத்துவதாகும்.

ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான செடானாகத் தொடர்ந்து விரும்புகிறார்கள். 25 லட்சம் இதயங்களைக் கைப்பற்றியதில் குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடும் டிசையர் பிராண்டின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றியுடனும் இருக்கிறோம், என குறிப்பிடுள்ளார்.

maruti dzire sedan sales achivement

1.2 லிட்டர் K12C டூயல் ஜெட் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் வழங்குகின்ற என்ஜினில் 5 வேக மேனுவல் உட்பட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனில்  76 bhp பவர் மற்றும் 98.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.