
லால் சலாம் படத்தில் ரஜினியின் சம்பளம் குறித்து தகவல்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இதில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு ரோலில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ரஜினி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரூ.40 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.