சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துவரும் வரவேற்பு விஷால், ஆதிக் ஆகியோருக்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது. வழக்கம்போல மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார் எஸ்ஜே