வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற வேர்ல்ட்ரெஸ்லிங் எண்டர்டெயின்மென்ட் போட்டியில் நாட்டு..நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீரர்களால் போட்டி களை கட்டியது.
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கர் விருது பெற்றது. அதுமட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்,பாடலில் இடம்பெற்றுள்ள நடனத்தை தங்களுடைய சந்தோசங்களை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடி வருகின்றனர்.
இதனிடையே கடந்த 2017 ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் டபிள்யூ.டபிள்யூ.இ., அதிகமானோரால் பார்க்கப்படும் பொழுது போக்கு விளையாட்டாக இருந்து வருகிறது. இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள கச்சி பெளலியில் உள்ள பாலயோகி உள் விளையாட்டு அரங்கில் டபிள்யூ.டபிள்யூ.இ., நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டபிள்யூ.டபிள்யூ.இ., சாம்பியன்களான சாமிஜெய்ன் மற்றும் கெவின் ஓவன்ஸ்,ட்ரூ மெக்கின்டைர், ஜிண்டர் மஹால், மாட்ரிடில் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் போது பரபரப்பான மற்றும் தீவிரமான சூழலை ஒதுக்கிவைத்து விட்டு வீரர்கள் அனைவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து தங்களின் அபிமான வீரர்கள் நடனமாடியதை கண்ட ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement