கிழக்கு மாகாண ஆளுநர் மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகள் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் (16/09/2023) சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலைப் பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.