சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீடீர் பணிப்புரை – கிளிநொச்சியில் இடம்பெறும் மண் கடத்தலை கட்டுப்படுத்த தூரித நடவடிக்கை மேற்கொள்ளும் துறைசார் தரப்பினர் ..

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இரண்டு வார காலத்திற்குள் மணல் அகழ்வுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்ரைய தினம் விடுத்திருந்த பணிப்புரைக்கு அமைய மணல் கடத்தல் இடம்பெறுவதாக இனம் காணப்பட்ட பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்ட இரானுவம் மற்றும் பொலிஸ் துறைசார் திணைக்கள அதிகாரிகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய்ந்துள்ளனர் .

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக பல பகுதிகளில் நடைபெற்று வருவதன் காரணமாக பல இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதோடு நெற் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, இரண்டு வார காலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார் மற்றும் கனியவள திணைக்களத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் கடத்தல்கள் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்க மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சரால் பணிப்புரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.