நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய்ஷா| Jayshah gave golden ticket to actor Rajinikanth

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கி கவுரவித்துள்ளார்.

வரும் அக்.,5ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ‘கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகர்அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். இதன் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.