மீண்டும் மிரட்டுது சீன உளவு கப்பல்| Sri lanka, India: Chinese spy ship threatens again

கொழும்பு : இலங்கைக்கு இம்மாத இறுதியில் வந்து 17 நாட்கள் முகாமிட உள்ள உளவு கப்பலால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6. இரண்டு நாட்களுக்கு முன் இந்த கப்பல் மலேசியாவை அடுத்த மலாக்கா ஜலசந்திக்கு வந்துள்ளது. அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆய்வு விரைவில் முடிந்தால் செப்., 24, 25ல் கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். அங்கு கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இரு துறைமுகங்களிலும் சேர்த்து 17 நாட்கள் சீனக் கப்பல் நிறுத்தப்படுகிறது.

ஷி யான் உளவுக் கப்பல் பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக் கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது. கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங் என்ற கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பான்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியா கடுமையாக நடந்துகொண்டதையடுத்து, அக்கப்பல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

அதே நேரத்தில் ஷி யான் 6 கப்பலுக்கு அனுமதியளிப்பது தொடர்பான கோரிக்கை ஆய்வில் இருப்பதாகவும் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் வற்புறுத்தலால் சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்கவில்லை என இலங்கை அரசு கூறினாலும் கடைசி நேரத்தில் அனுமதி அளிக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இலங்கை அரசின் செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.