விவசாயிகளுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி

விஜய் டிவி பிரபலமான பாலா கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் மக்களை சிரிக்க வைத்து எண்டர்டெயின் செய்து, தற்போது தான் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும், தான் வாங்கும் குறைவான சம்பளத்தில் பெரும் தொகையை தொடர்ந்து பொதுமக்களின் நன்மைகளுக்காக செலவழித்து பலரது உள்ளங்களில் ஹீரோ அந்தஸ்தை பெற்று வருகிறார்.

ஏழை குழந்தைகளின் படிப்பு, ஆம்புலன்ஸ் சேவை என பல நல்ல காரியங்களை செய்து வரும் பாலா, சமீபத்தில் 125 விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் மண்வெட்டி, கடப்பாறை மற்றும் விவசாய உபகரணங்களை வழங்கியுள்ளார். இதனை சில நெட்டிசன்கள் பாலா விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி செய்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாலாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் ரசிகர்கள் படத்தில் மட்டுமே தானம் செய்து சீன் போடுகிறார்கள். அதற்கு கைத்தட்டும் நீங்கள் சாதரண மனிதரான பாலாவின் நல்ல செய்கைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை கேலி செய்யாதீர்கள் என சண்டையிட்டு வருகின்றனார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.