சென்னை: வருது.. வருது.. அட விலகு விலகு.. வேங்கை வெளியே வருது என்றும் அதிருதா.. உள்ள அதிரணும் மாமே என தியேட்டர்களையே தெறிக்கவிட்டு வருகிறது விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயாகர் சதுர்த்தி விடுமுறையுடன் அதிகபட்ச வசூல் வேட்டையை ஆடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
