பாலிவுட் நடிகர் அகில் மிஸ்ரா தவறி விழுந்து திடீர் மரணம்

டான், காந்தி மை பாதர், ஷிகார், 3 இடியட்ஸ், கல்கத்தா மெயில், ரேடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அகில் மிஸ்ரா. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி சூசான் பெர்னார்டும் நடிகை. 67 வயதான அகில் மிஸ்ரா மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று அவர் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏணியில் ஏறி உயரமான பகுதியை சுத்தப்படுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக ஏணி சரிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் ஐதராபத்தில் படப்பிடிப்பில் இருந்த மனைவி சூசான் உடனடியாக விமானத்தில் மும்பை திரும்பினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “என் இதயம் உடைந்தது, என் வாழ்க்கை துணை என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்” என்று பதிவிட்டுள்ளார். அகில் மிஸ்ராவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.