Video: அவுட் கொடுத்தாலும் தொடர்ந்து பேட்டிங் செய்த வீரர் – இது அஸ்வினுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்!

Ish Sodhi Bizarre Mankading: கிரிக்கெட் பொறுத்தவரை நடுவர் என்ன சொல்கிறாரா, அது தான் இறுதி தீர்ப்பாக இருந்தது, இருக்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துவிட்ட நிலையில், மனிதத் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க மூன்றாவது நடுவர், டிஆர்எஸ் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், கள நடுவர்களின் தீர்ப்பும், கணிப்பும் இதில் பெரும் பங்கை வகிக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

வினோத சம்பவம் 

எனவே, இறுதி முடிவாக நடுவர் ஒரு வீரருக்கு அவுட் கொடுத்துவிட்டால் அவர் பெவிலியனுக்கு திரும்பியே ஆக வேண்டும். களத்தில் முடிவுக்கு மறுத்தாலோ அல்லது நடுவரிடம் மீண்டும் மீண்டும் முறையிட்டாலோ அவருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்பட ஐசிசி விதிகளில் உள்ளது. மேலும், களத்திற்கு வெளியே இருந்தும் யாரும் நடுவரின் முடிவின் மீது முறையிட முடியாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், நேற்று நடந்த வங்கதேச அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியை பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் வினோதமாக தெரிந்திருக்கும்.

மூன்றாவது நடுவரால் இஷ் சோதி அவுட் கொடுக்கப்பட்டார். இருப்பின், அவர் மீண்டும் கிரீஸுக்கு வந்து விளையாடினார். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில், வங்கதேச அணியை நியூசிலாந்து 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இருப்பினும், வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

அவுட் ஆனால் இல்லை…

ஆனால், நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது 46ஆவது ஓவரில் தான் அந்த வினோத சம்பவம் நடந்தது. வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மகமுத், நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த இஷ் சோதியை மான்கட்டிங் முறையில் ரன்-அவுட் செய்தார். அதாவது, பந்துவீசி முடிப்பதற்குள் கிரீஸை தாண்டி சென்றதால் ரன்அவுட்டாகி உள்ளார். மூன்றாவது நடுவரிடம் முறையிட்டதில் அவுட் கொடுக்கப்பட்டது. இருப்பினரும், வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், சக வீரர் சௌமியா சர்கார் ஆகியோர் இணைந்து கலந்துரையாடி, பவுண்டரி லைன் வரை சென்ற இஷ் சோதியை அவர்கள் மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர். 

Hasan Mahmud ran out Ish Sodhi at non striker’s end.

Thrid umpire gave out.

Bangladesh called back Sodhi then Sodhi hugged Mahmud.

– Incredible scenes yesterday! pic.twitter.com/BY9H44r0K4

— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 24, 2023

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வரும் சூழலில் பலரும் லிட்டன் தாஸை பாராட்டி வருகின்றனர். வங்கதேச அணி தோல்வியை தழுவினாலும் பலராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும், போட்டி முடிந்த பின் வங்கதேச வீரரும், முன்னாள் கேப்டனுமான தமீம் இக்பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,”இங்கே எச்சரிப்பதற்கு என்று எதுவும் இல்லை. இது தைரியமான முயற்சியாகும். அந்த நேரத்தில் ஒரு வேளை கேப்டன் இப்படி அவுட் ஆக வேண்டாம் என நினைத்திருப்பார்.

இது அணியாக எடுக்க வேண்டிய முடிவு

அதனால்தான் அவரை மீண்டும் அழைத்து வந்தோம். உண்மையில் இதில் தவறேதும் இல்லை. ஒன்று நீங்கள் செய்துவிட வேண்டும் அல்லது நீங்கள் எதுவுமே செய்யக்கூடாது, அதில் தவறேதும் இல்லை. இது அணியில் விவாதிக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த போட்டிக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம். அது அணியின் முடிவு என்றால், நாங்கள் அத்தகைய விக்கெட்டுகளை எடுப்போம், இல்லையென்றால், நாங்கள் அவற்றை எடுக்க மாட்டோம். இன்றைய நிகழ்வுக்குப் பிறகு கண்டிப்பாக இதைப் பற்றி விவாதிப்பேன். ஒரு அவுட்டாகி வெளியேறி பின் அவரை மீண்டும் அழைப்பது சரியானது இல்லை” என்றார்.

விதிமுறைப்படி இது சரியே

விதிமுறையின் படி மான்கட்டிங் முறையில் அவுட்டாகுவது சரியானதே. இருப்பினும், சில வீரர்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர். முதல் முறை எச்சரிக்கை தர வேண்டும் எனவும் வாதிடுகின்றனர். இருப்பினும், இதனை ஐபிஎல் போட்டி ஒன்றில் முயன்று, பட்லரை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வின், மான்கட்டிங் முறையை எப்போதும் ஆதரித்து வருகிறார். பேட்டர்களுக்கு சாதகமாக மட்டும் போட்டியை கொண்டு செல்வது என்பது சரியாக இருக்காது என்றும், பந்துவீசி முடிப்பதற்குள் ஓடத் தொடங்குவது எப்படி சரியானதாக இருக்கும் என்பது அவரின் வாதமாக உள்ளது.  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.