ஆர் யூ ஓகே பேபி: (தமிழ்)

இந்தப் படத்தை இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளிகியுள்ளது.
டீமன் (Demon): தமிழ்

‘டீமன்’ படத்தை ரமேஷ் பழனிவேல் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியது.
சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் கதாநாயகன், தயாரிப்பாளரிடம் கதை ஒன்றைச் சொல்லி படம் எடுக்க ஆயத்தமாகிறார். பட வேலைகளுக்காக தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார். அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பதே கதைக்களம்.
கடத்தல்: (தமிழ்)

சலங்கை துரை இயக்கத்தில் புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கடத்தல்’. இப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியது. க்ரைம் டிராமா ஜானரில் மதுரைப் பகுதியை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இப்படம்.
ஐமா : தமிழ்

இந்த வார ஹாரர் திரில்லர் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. ராகுல் ஆர் கிருஷ்ணா இயக்கியுள்ள படம், ‘ஐமா’. இந்தப் படமும் செப்டம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கெழப்பய: தமிழ்

ஒரு முதியவரை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்கியுள்ளவர், யாழ் குணசேகரன். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து ஒரு காரில் கூட்டி செல்கின்றனர். வழியில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் முதியவர் ஒருவர், காருக்கு வழி கொடுக்க மறுக்கிறார். ஒருகட்டத்தில் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. இதுவும் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
Vaathil: மலையாளம்

இந்த வார மலையாள படங்களின் வரிசையில் ‘Vaathil’ என்ற படம் வெளியாகியுள்ளது. ராமகாந்த் சர்ஜு இயக்கத்தில் வினை ஃபார்ட், அனு சித்ரா, எஸ்.வி கிருஷ்ணா சங்கர், மெரின் ஃபிலிப் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் த்ரில்லர் கதையாக நகர்கிறது இப்படம். இது செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது.
தி கிரேட் இண்டியன் ஃபேமிலி: ஹிந்தி

ஹிந்தியில் ‘தி கிரேட் இண்டியன் ஃபேமிலி’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. இப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார். இதை ஃபேமிலி காமெடி கதையாக உருவாக்கியுள்ளனர். இதில் விக்கி கௌஷல், மனுஷி சில்லார், யஷ்பால் ஷர்மா, குமுத் மிஷ்ரா உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று வெளியானது.
சுக்ஹீ (Sukhee) : ஹிந்தி

சோனல் ஜோஷி இயக்கியுள்ள ஹிந்தித் திரைப்படம், சுக்ஹீ. இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி, அமித் சாத், தில்நஸ் இரானி, குஷா கபிலா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கரன் குல்கர்னி இசையமைத்துள்ளார். ஷில்பா ஷெட்டியை கதாநாயகியாக வைத்து உருவாகியுள்ளது, இத்திரைப்படம். இது செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
தி மூன் (The Moon): கொரியன்

கொரியன் மொழியில் ‘The Moon ‘ திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த சயின்ஸ் ஃபிக்சன் + அட்வென்சர் திரைப்படத்தை கிம் யாங் ஹா இயக்கியுள்ளார். விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
எக்ஸ்பென்டபுள்ஸ் 4 : இங்கிலீஷ்

எக்ஸ்பென்டபுள்ஸ் திரைப்படத்தின் நான்காவது பாகமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஸ்காட் வாக் இயக்கியுள்ளார். இதில் சில்வெஸ்டர் ஸ்டேல்லன், ஜாசன் ஸ்டாதம், டால்ஃப் லண்ட்க்ரென், மேகன் ஃபாக்ஸ், டோனி ஜா, இகோ வெய்ஸ் உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படத்தில் கில்லியாம் ரோஸ்ஸல் இசையமைத்துள்ளார். இந்த அதிரடி ஆக்ஷ்ன் படம், திரையரங்குகளில் செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியானது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்:
Inside (English) – Jio Cinema

இத்திரைப்படம் ஜியோ சினிமா ஆப்பில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியானது. உயர் ரக கலைப் பொருள்களை கொள்ளையடிக்கும் திருடன், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான பென்ட்ஹவுசில் திருட முயற்சிக்கிறார். உள்ளே சென்ற பின்னர், அங்கேயே சிக்கிக் கொள்கிறான். அங்கே விலைமதிப்பற்ற கலைப் படைப்புகளை தவிர வேறெதுவும் இல்லை. இதற்குப் பிறகு என்ன நடந்தது, அவர் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதே கதை. இப்படத்தை வாசிலிஸ் காட்சௌபிஸ் இயக்கியுள்ளார்.
Jaane Jaan (Hindi) – Netflix

கரீனா கபூர் நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில், செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை சுஜய் கோஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் விஜய் வர்மா இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருமணமாகி தனியாக வசித்து வரும் கரீனா கபூர், ஒரு கொலை வழக்கில் விசாரிக்கப்படுகிறார். இதில் அவரது பக்கத்து வீட்டுக்காரரான கணித ஆசிரியர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
Maal (Tamil) – Aha

‘மால்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில், செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகியது. இந்தப் படத்தை தினேஷ் குமரன் என்பவர் இயக்கியுள்ளார். சிலை கடத்தல் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அஷ்ரஃப், எஸ்.பி.கஜராஜ், கௌரி நந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
No one will save you (Hotstar) – English

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், செப்டம்பர் 22 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது. சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஹார்ரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் கைத்லின் டேவெர் என்பவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ப்ரையன் ட்ஃபீல்டு என்பவர் இயக்கியுள்ளார்.
Cassandro (English) : Amazon prime

அமேசான் ப்ரைம் தளத்தில் கஸ்ஸான்ட்ரோ திரைப்படம், செப்டம்பர் 22 ஆம் தேதியில் வெளியாகியது. இப்படத்தை ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். இதில் கேல் கார்சியா பெர்னல், பேட் ஃபன்னி, எல் ஹிஜோ டெல் ஆகியோர் நடித்துள்ளனர்.
Spy Kids: Armageddon (English) – Netflix

இந்த திரைப்படத்தை ராபர்ட் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 22 ஆம் தேதி வெளியானது. இதில் கினா ரோட்ரிகஸ், சாச்சரி லெவி, பில்லி மேக்னசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
How to deal with a Heartbreak (Spanish) – Netflix

ஸ்பானிஷ் மொழியில் உருவாகியிருக்கும் இப்படம், செப்டம்பர் 22 ஆம் தேதியன்று வெளியானது. இரு நண்பர்களுக்குள் நடக்கும் நிகழ்வைப் பற்றிப் பேசுகிறது, இப்படம். இதை ஜோவன்னா லாம்பர்டி இயக்கியுள்ளார். இதில் ஆனா மரியா, ஜேசன் டே, கிறிஸ்டோபர் வோன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Song of the Bandits (Korean) : Netflix

‘Song of the Bandits’ என்ற சீரிஸ் கொரிய மொழியில் உருவாகியுள்ளது. இந்த முதல் சீசனில் லீ ஹோ ஜங், கிம் நம் கில், லீ ஹூன் வுக் சியோஹன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Fast X – Jio Cinema

ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் கடந்த மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியிருந்த பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது செப்டம்பர் 15ஆம் தேதியன்று ஜியோ சினிமா தளத்தில் வெளியாகிஉள்ளது. இதில் வின் டீசல், ஜேசன் மோமோ, ஆலன் ரிட்ச்சன், ரீடா மொரெனோ உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
டைனோசர்ஸ் (தமிழ்) – அமேசான் ப்ரைம்

கடந்த ஜூலை 28 ஆம் தேதியன்று எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் ‘டைனோசர்ஸ் ‘ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 19 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய்பிரியா தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
Love again (English) – Netflix

இந்தப் படத்தில் கரீனா சோப்ரா, சாம் ஹுகன், நிக் ஜோனஸ், செலின் டியான், ரஸ்ஸல் டோவெய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஜேம்ஸ். சி. ஸ்ட்ரோஸ் இயக்கியுள்ளார்.
ஆர் டி எக்ஸ் ( மலையாளம்) ( Netflix)

‘RDX: Robert Dony Xavier’ நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் மூவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘RDX’. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் ரிலீசாகியிருக்கிறது.