நெல்சன் மண்டேலா பேத்தி புற்றுநோயால் காலமானார்| zoleka mandela: Nelson Mandela grand daughter dies aged 43

கேப்டவுன்: புற்றுநோயுடன் போராடிவந்த நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார். அவருக்கு வயது 43.

தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா தனது 43வது வயதில் உயிரிழந்துள்ளார். ஜோலேகா மண்டேலா தனது இடுப்பு, கல்லீரல், நுரையீரல், மூளை மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றில் மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே நேற்று (செப்.,26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உறுதி செய்தது.

நெல்சன் மண்டேலா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு “மண்டேலா குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.