
ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்…
நடிகைகள் என்றாலே கிளாமர் என்றும், நடிகர்கள் என்றாலே ஹேர்ஸ்டைல் என்றும் 'ஸ்டைல்' பற்றிப் பேசுவார்கள். ஆரம்பம் முதல் இப்போது வரை தனது ஹேர்ஸ்டைல் பற்றி ஒவ்வொரு படத்திலும் பேச வைப்பவர் ரஜினிகாந்த்.
70 வயதான நிலையில் நிஜத்தில் எந்த விதமான மேக்கப்பும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர் ரஜினிகாந்த். அவரது இமேஜ் பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டார். அதே சமயம் படத்தில் இவரா அவர் என்று ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் அப்படியே மாறியிருப்பார்.
'ஜெயிலர்' படத்தில் கூட அவரது ஹேர்ஸ்டைல் பற்றிப் பேசியவர்கள் பலர் உண்டு. அடுத்து அவர் நடிக்க உள்ள 170வது படத்தில் புது ஹேர்ஸ்டைலில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் ஹக்கிம் ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒன் அன்ட் ஒன்லி ரஜினிகாந்த். சென்னையில் ரஜினிகாந்த் சாருடன் ஒரு நாள் இருந்தேன். கலை மீதான அவரது ஆர்வம், சுற்றியுள்ள அனைவரையும் ஊக்குவிக்கும். அதுதான் அவர் ராஜாவாக இருக்கக் காரணம். விரைவில் உற்சாகமான ஒன்று வர உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.