வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 100 அப்பாவிகள் மற்றும் வீரர்கள் கடத்தி செல்லப்பட்டதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, 100 அப்பாவி மக்கள், ராணுவ வீரர்களை கடத்தி சென்றனர். 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், 5 ஆயிரம் ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புல்டோசர்கள் மூலம் எல்லையில் இருந்த வேலியை தகர்த்ததுடன், பாராகிளைடர்கள் மூலமும் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், முதல் தாக்குதல் நடத்திய உடனே அப்பாவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
காயமடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவிகள் கைகளை பின்னால் கட்டி வாகனங்களில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்றிச் செல்லும் வீடியோக்கள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement