இஸ்ரோ மீது தினந்தோறும் சைபர் தாக்குதல் :சோம்நாத்| Daily cyber attack on ISRO: Somnath

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: இஸ்ரோ மீது தினந்தோறும் நூற்றக்கணக்கான சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது. என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

கேரளாவின் கொச்சியில் 16-வது சர்வதேச சைபர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சோம்நாத் பேசுகையில் இஸ்ரோ தினந்தோறும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடி வருகிறது. மேலும் ராக்கெட்டுகளில் பொருத்தப்பட்டு உ்ள்ள ஹார்டுவேர் சிப்-ஐ பாதுகாக்க பல்வேறு சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

மேலும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சைபர் தாக்குதலுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. இதனை சமாளிப்பதற்காக வலுவான சைபர் பாதுகாப்பு கொண்ட நெட்ஒர்க்கை இஸ்ரோ கையாண்டு வருகிறது என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.