சென்னை: தமாகா தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காத கர்நாடக மாநில அரசைக் கண்டித்து வரும் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு, டெல்டா மாவட்ட தமாகா சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புரையாற்றுகிறார். இதில், தமாகா டெல்டா மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், துணை அமைப்புத் தலைவர்கள், தமாகா விவசாய அணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
