10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி| Class 10, 12 Public Examinations: Union Education Minister Exclusive Interview

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இனி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. இது முற்றிலும் விருப்பமானது என தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யகே பேட்டி அளித்தார்.

கட்டாயமில்லை

அப்போது அவர் கூறியதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. இது முற்றிலும் விருப்பமானது. மாணவர்களுக்கு பயத்தால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இரண்டு ஐஐடிகள் ஏற்கனவே வெளிநாட்டில் தங்கள் வளாகங்களை அமைப்பதில் முக்கிய கட்டத்தில் உள்ளன. விருப்பம் தெரிவித்த பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு மத்திய வெளியுறவு துறை ஒன்றிணைந்து செயல்படுகிறது.

முன்னுதாரணம்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். நாங்கள் ஒரு முன்னுதாரண மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். எனவே அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்திய பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

பாதுகாப்பு

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கல்லூரியில் நடந்த ராகிங் குறித்து தர்மேந்திர பிரதான் கூறுகையில், விலைமதிப்பற்ற உயிர்கள் எதுவும் இழக்கப்படக்கூடாது. அவர்கள் நம் குழந்தைகள், மன அழுத்தமில்லாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.