புதுடில்லி: உலக கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘டாஸ்’ வென்று ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்.,11) நடக்கும் லீக் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி ‘பேட்டிங்’ தேர்வுசெய்தது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி விபரம்:
ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement