கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 5 ஆயிரம் புதிய பயனாளிகள் சேர்ப்பு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ரூ.1000 ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் புதிதாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம்தேதி மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இத்திட்டத்தின்கீழ், 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஆயிரம் வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூ. 1065 கோடியே 21 லட்சத்து98 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டுள்ளது.

அத்தனை பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் வரவு வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த அக்டோபர் மாதத்துக்கான உரிமைத்தொகை அக்.15ம் தேதி விடுமுறை நாள் என்பதால் ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகை அனுப்ப முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

8,833 பெயர்கள் தகுதி நீக்கம்: இதையடுத்து, அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். உரிமைத்தொகை பெற்றுக் கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும்தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அக்டோபர் மாதத்துக்கான 1,06,48,406 மகளிருக்கான ரூபாய் 1064 கோடியே,84 லட்சத்து 6 ஆயிரம் உரிமைத்தொகைஅக்டோபர் 14-ம் தேதி அன்றே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இப்பயனாளிகளில் முறையான வங்கிக் கணக்கினைக் கொண்டிராத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் பணவிடை மூலமாகவும் உரிமைத்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.