பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா? இதுதான் வழி

உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் லீக் சுற்றுப் போட்டிகள் பாதி கட்டத்தை கடந்துவிட்டன. 10 அணிகளும் 5 போட்டிகளை விளையாடி முடித்துவிட்டன. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே ஒவ்வொரு அணிக்கும் இருக்கிறது. இதில் இதுவரை மூன்று நான்கு தோல்விகளை அடைந்திருக்கும் அணிகள் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால் கூட அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும். குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால் கூட அந்த அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிடும். 

இங்கிலாந்து அணிக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பு என்னவென்றால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மற்றும் மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும். இவையெல்லாம் சாதகமாக அமையும் பட்சத்தில் இங்கிலாந்து அணி அதிசயமாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இலங்கை அணிக்கு இப்போது அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் கூட ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறலாம். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தாராளமாக அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதே நிலையில் தான் பாகிஸ்தான் அணியும் இருக்கிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நிச்சயம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

இனி வரும் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்லலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதல் இரண்டு இடங்களுக்கு மூன்று அணிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அவற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் அதிகபட்சம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து, இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளின் போட்டி முடிவு புள்ளிப் பட்டியலில் சுவாரஸ்யமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆஸ்திரேலிய அணியும் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு பிரம்மாண்டடமாக எழுச்சி கண்டுள்ளனர்.

அந்த அணி விளையாடிருக்கும் 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது. இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்குகூட போட்டி போடலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.