
ரூ.4 கோடிக்கு கார் வாங்கிய பிரபாஸ் பட நடிகை
பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார். ஆஷிக் 2, பாகி, ஏ.பி.சி.டி ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக 'சாஹோ' படத்தில் நடித்தது மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ரத்தா கபூர் ரூ. 4 கோடி மதிப்பிலான லம்போர்கினி சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.